1. உங்களுடைய  நிறுவனத்தில் ஓட்டுநர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ?


  • Police Nov
  • Nativity certificate
  • Guaranteed from his nominee
  • Guaranteed from his reference Driver

இந்த நான்கு விதிமுறைகளை பின்பற்றி ஓட்டுநர்களின் தரத்தை உறுதி செய்கிறோம். மேலும் ஓட்டுநரின்  அசல் ஓட்டுநர் உரிமம் hold செய்வதன் மூலமாக ஓட்டுநர்களின் மேல் உள்ள நம்பிக்கையை உறுதி செய்கிறோம்.

2. ஒவ்வொரு  பயணத்தின் போதும் புதிது புதிதாக ஓட்டுநர்கள் வருகிறார்கள். இந்த நிலையை தவிர்த்து "REPEATED DRIVERS" சாத்தியமா?

எங்களது நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் குழு உள்ளது. எங்களது ஒருங்கிணைந்த  முயற்சியால் இதற்கான கட்டமைப்பை  வகுத்துள்ளோம். இதன் படி நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ( வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும்) மூன்று ஓட்டுநர்கள் வீதம்   நியமிக்கப்படுவார்கள் . இவர்கள் சுழற்சி முறையில் தங்களுக்கான சிறந்த சேவையை மேற்கொள்வார்கள்.

3. நாங்கள் தொடர்ச்சியாக acting Driver பயன்படுத்துபவர்கள். முக்கியமான தருணங்களில்  ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரி சவாலான சூழ்நிலைகளை எவ்வாறு உங்கள் நிறுவனம்  கையாளுகிறது ?

எங்களது நிறுவனம் 2014 -ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  முதல் வருடத்தில் இதே சூழ்நிலையில் தள்ளப்பட்டோம். பிறகு எங்கள் நிறுவனத்தின் மூத்த ஓட்டுநர்களின் கடின உழைப்பு மற்றும் புதுமையான சிந்தனைகளின் விளைவால் " COSTUMER REGISTRATION " என்ற மிகச்சிறந்த கட்டமைப்பை  உருவாக்கினோம். இதன் விளைவாக, கடந்த ஐந்து வருடங்களாக  எங்கள் நிறுவனத்தில் முறையாக பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தட்டுப்பாடின்றி  ஓட்டுநர்களை நியமிக்க முடிந்தது.

4. COSTUMER REGISTRATION- விதிமுறைகளை என்ன?

இந்த கட்டமைப்பின் படி வாடிக்கையாளர்களிடம் சில முக்கிய தகவல்களை நகல்களாக பெற்று கொள்கிறோம். உதாரணமாக

  • வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள்
  • வாகன காப்பீடு
  • வாடிக்கையாளர்களின் புகைப்படம்
  • வாடிக்கையாளர்களின் I'd proof

இவற்றோடு கூடிய படிவத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

" பதிவு கட்டணம் உண்டு "


 5. பெரும்பாலான பயணங்களில் நாங்கள் வகுக்கும் பயண திட்டங்கள் தோல்வியில் முடிகிறது அல்லது சரி வர நடப்பதில்லை.

உதாரணமாக

  • சரியான உணவகம் தேர்ந்தெடுப்பதில்....
  • தங்கும் விடுதி
  • Right time traffic
    • இதற்கு உங்களிடம் ஏதேனும் தீர்வு உண்டா ?

      எங்களது நிறுவனத்தில் பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பே பயண திட்டங்களை பெற்று எங்களுடைய அனுபவத்தில் பயணம் சிறப்பாக அமைய வழி வகை செய்கிறோம்.

      Bangalore airport drop பயணத்தை உதாரணமாக பார்க்கலாம்.

      இந்த பயண திட்டத்தில் ஐந்து  முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

      • Flight departure time
      • Perchase
      • Right time traffic
      • Fresh up
      • Restaurant

      இந்த ஐந்து விஷயத்தை கருத்தில் கொண்டு பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வழி வகை செய்கிறோம்.

      6. பல சமயங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பே உறுதி செய்த ஓட்டுநர்கள் கடைசி தருணங்களில் வர இயலாததால் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டோம் . உங்கள் நிறுவனத்தின் தீர்வை என்ன?

      ஒரு வாடிக்கையாளர் எங்களது நிறுவனத்தில் பதிவு செய்யும் போதே அவர்களுக்கான ஓட்டுநர்களை நியமித்து ஓட்டுநர்களின்  முழு தகவல்களையும் வாடிக்கையாளரிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

        மேலும் ஒரு பயணம் வெற்றிகரமாக அமைய மூன்று வழி முறைகளை கட்டமைத்துள்ளோம்.

      • பயணம் தொடங்கும் 12 மணி நேரத்துக்கு முன்பு ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளுக்கு பயண திட்டங்களின் முழு தகவல்கள் தெரிவிக்கப் படுகிறது.
      • பயணம் தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஓட்டுநர் வாடிக்கையாளரின்  இடத்தை அடைந்து வாகனத்தை சுத்தம் செய்வது மற்றும் அடிப்படை சோதனை மேற்கொண்டு வாகனம் பயணத்திக்கு உகந்தது என உறுதி செய்கிறார்.
      • பிறகு வாடிக்கையாளோடு இணைந்து பயண முன் ஏற்பாடுகளை கவனித்து பயணம் சரியான நேரத்தில் அமைய உதவி செய்கிறார்.

      இந்த மூன்று வழி முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கடைசி நேர பதற்றம் முழுவதும் தவிர்த்து பயணம் வெற்றிகரமாக அமைய வழி வகை செய்கிறோம்.

      7. ஒரு சில சமயங்களில் எங்களது பயணம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது அல்லது ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தகைய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை  உங்கள் நிறுவனம் எவ்வாறு கையாளுகிறது?

      குறைந்தபட்சம் 14 மணி நேரத்துக்கு முன்பு கட்டணமின்றி பயணத்திற்கான ஒத்திவைப்பு அல்லது ரத்து செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு பயணம் ரத்து செய்ய நேர்ந்தால் உங்கள் பயணத்தின் பதிவு பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

      8. உங்கள் நிறுவனத்தின் கட்டமைப்பில் அவசர அழைப்புக்கான விதிமுறைகளை என்ன?

      குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அவசர அழைப்பை மேற்கொள்ளளாம்.

      பின் குறிப்பு: உங்களுடைய அவசர அழைப்பின் போது அந்த நேரத்தில் free - யாக இருக்கும் ஓட்டுநர் நியமிக்க படுவார்.

      9. பயணத்தின் போது எங்களது வாகனத்தில் திடீரென பழுது ஏற்பட்டால் உங்கள் நிறுவனத்தின் முன் ஏற்பாடுகள் என்ன?

      பயணம் தொடங்கும் முன்னால் ஓட்டுநர்களால் மேற்கொள்ளப்படும் " BASIC CHECKUP " பெரும்பாலான பழுது தவிர்க்க படுகிறது.  அதையும் மீறி  பழுது ஏற்பட்டால்  தகுந்த அவசர அழைப்பு மேற்கொண்டு பயணம் தடையின்றி அமைய ஏற்பாடு செய்கிறோம் .

      10. உங்கள் நிறுவனத்தில்  online booking மற்றும் online payment உள்ளதா ?

      எங்களது இணையதளம் driveever.in. online payment வசதி உள்ளது.

      11. உங்கள் நிறுவனத்தில் பதிவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு உங்களுடைய சேவை கிடைக்குமா ?

      எங்களது நிறுவனத்தின் இணையதளம் மூலம் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் மின்னஞ்சல் மூலம் பதிவு எண் அனுப்பப்படும்.  அந்த பதிவு எண் இருந்தால் மட்டுமே உங்கள் பயணத்திற்கான ஓட்டுநர்களை பெற முடியும்.

          "வாடிக்கையாளர்களின் பதிவு அவசியம் "